மீண்டும் அதிகாரத்தைப் பெற்றார் தாய்லாந்து அரசி சினிநத்
தாய்லாந்து மன்னர் மகா வஜிராலோங்கோர்ன் 35 வயதான அரசி சினிநத்துக்கு மீண்டும் ராணுவ அந்தஸ்து உள்ளிட்ட அரசு உயர்பதவிகளை வழங்கியுள்ளார்.
அவர் மீது பல்வேறு துரோக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக பொதுவாழ்வில் இருந்து அவர் தலைமறைவாக இருந்த நிலையில் அவர் மீது களங்கமில்லை என்று அறிவிக்கப்பட்டு மீண்டும் அவர் முன்பு வகித்த அதே பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளார்.
35 வயதான அரசி சினிநத்துக்கு மீண்டும் பதவிகள் வழங்கப்பட்டுள்ளது அரசு பாரம்பரிய அதிகாரத்தை தொடர்வதற்கான நடவடிக்கை என்று கருதப்படுகிறது. தாய்லாந்தில் மன்னரின் அதிகார விரிவாக்கத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
Comments