டெல்லியில் மதுபான விடுதிகளை திறப்பதற்கு அனுமதி
டெல்லியில் வரும் 7ம் தேதி முதல் மதுபான விடுதிகளைத் திறப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
ஐந்து மாதங்களுக்கும் மேலாக மதுபான விடுதிகள் மூடப்பட்டிருந்த நிலையில், நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வில் பார்களைத் திறப்பதற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. அதன்படி, டெல்லியில் கட்டுப்பாட்டுப் பகுதிகளைத் தவிர மற்ற இடங்களில் பார்களைத் திறக்க துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் ஒப்புதல் அளித்துள்ளார்.
முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல், கிருமிநாசினியை பயன்படுத்துதல், 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு அனுமதி போன்ற வழிகாட்டு விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
Comments