எல்லைப் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தைக்கு வருமாறு சீன பாதுகாப்பு அமைச்சகம் ராஜ்நாத்சிங்கிற்கு அழைப்பு

0 2297
எல்லைப் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தைக்கு வருமாறு சீன பாதுகாப்பு அமைச்சகம் ராஜ்நாத்சிங்கிற்கு அழைப்பு

ரஷ்யா சென்றுள்ள மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கு சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் எல்லைப் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

மாஸ்கோவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அந்நாட்டுத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கய் சோய்குவுடன் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை விற்கமாட்டோம் என்று ரஷ்யா உறுதியளித்துள்ளது.

இந்த மாநாட்டில் பங்கேற்கும் சீன பாதுகாப்பு அமைச்சருடன் ராஜ்நாத்சிங் பேச்சு நடத்துவது குறித்து எந்த தகவலும் இல்லை.

ஆனால் எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்துமாறு ரஷ்யாவில் ராஜ்நாத்சிங்கிற்கு சீன பாதுகாப்பு அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த அழைப்பை ஏற்பதா அல்லது நிராகரிப்பதா என்பதை இந்தியா இன்னும் முடிவு செய்யவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments