கொரோனா பரவத் தொடங்கிய ஊகானில் நகரில் சுற்றுலாப் பயணிகள் வரத்து அதிகரிப்பு

0 1096
கொரோனா பரவத் தொடங்கிய ஊகானில், சுற்றுலாப் பயணிகள் வரத்து அதிகரிப்பு

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தோன்றிய இடமாக கருதப்படும் சீனாவின் ஊகான் நகரில், உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது.

சீனாவின் கொரோனா பாதிப்பில் 80 சதவீதத்தை கொண்டிருந்த ஊகான் நகரில், 3 ஆயிரத்து 869 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், நோய் பரவலை கட்டுப்படுத்த ஜனவரியின் பிற்பகுதியில் அமல்படுத்தப்பட்ட கடுமையான ஊரடங்கு உத்தரவுகள் கடந்த ஏப்ரல் மாதத்தில் நீக்கப்பட்டது.

மேலும் கடந்தே மே 18 ஆம் தேதிக்கு பிறகு புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்படாத நிலையில், நகரை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் முயற்சியாகவும் பார்வையாளர்களை ஈர்க்கும் விதமாகவும் சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments