விண் ஆயுத பலத்தை அதிகரிக்கும் சீனா - அமெரிக்கா அறிக்கை
சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி விண்வெளி ஆய்வுகளில் தீவிர கவனம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏதேனும் யுத்தம் அல்லது நெருக்கடி ஏற்பட்டால் விண்வெளியின் தொழில்நுட்ப சாத்தியங்களை பயன்படுத்திக் கொள்ள அது திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக செயற்கைக் கோள்கள் ,ரோபோக்கள் போன்ற மின்னணு போர் சாதனங்களை அது வடிவமைத்து வருகிறது.செயற்கைக் கோள் ஜாமர் கருவிகள், மின் ஆயுதங்கள் ஆகியவற்றை சீனா அதிகப்படுத்தி வருகிறது.
இது குறித்து அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை சுமார் 200 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை யு.எஸ். காங்கிரஸ் சபை முன் தாக்கல் செய்துள்ளது.
Comments