இருசக்கர வாகனம், காரில் தனியாக சென்றால் முகக்கவசம் அவசியமா ? : அதற்கான எந்த வழிகாட்டலும் வெளியிடப்படவில்லை -ராஜேஷ்பூஷண்

0 2830
கார்கள் அல்லது இருசக்கர வாகனங்களில் தனியாகச் செல்லும் போது முகக்கவசம் அணிவது குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் ஏதும் வெளியிடவில்லை என மத்திய அரசின் சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ்பூஷண் தெரிவித்துள்ளார்.

கார்கள் அல்லது இருசக்கர வாகனங்களில் தனியாகச் செல்லும் போது முகக்கவசம் அணிவது குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் ஏதும் வெளியிடவில்லை என மத்திய அரசின் சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ்பூஷண் தெரிவித்துள்ளார்.

ஆனால்,  சைக்கிள் ஓட்டுதல், உடற்பயிற்சி, ஓட்டப்பயிற்சி ஆகியவற்றின் போது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் பங்கேற்கும் பட்சத்தில், மற்றவர்களுக்குத் தொற்று பரவாமல் இருக்க முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கார் ஓட்டும் போது முகக்கவசம் அணியவில்லை என்று அபராதம் விதிக்கப்படுவதாக கடும் அதிருப்தி எழுந்த நிலையில், இது குறித்து எந்த வழிகாட்டலையும் வெளியிடவில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments