ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு ஆந்திராவில் தடை
ஆந்திர மாநிலத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களான ரம்மி மற்றும் போக்கர் ஆகியவற்றுக்கு தடை விதிக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தலைநகர் அமராவதியில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், விவாதிக்கப்பட்ட அம்சங்கள் குறித்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் பெர்னி நானி செய்தியாளர்களிடம் விவரித்தார்.
அப்போது பேசிய அவர், தடையை மீறும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு அமைப்பாளர்கள் முதன்முறை பிடிபட்டால் ஓராண்டு சிறையும், 2-வது முறை பிடிபட்டால் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்றார். மேலும், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை விளையாடுபவர்களுக்கும் ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும்
Comments