AK47 203 என்ற நவீன ரக துப்பாக்கிகளை வாங்கும் இந்தியா

0 3031
ஏகே 47 203 என்ற நவீன ரக துப்பாக்கிகளை ரஷ்யாவிடம் இருந்து வாங்குவதற்கான ஒப்பந்தத்தை இந்தியா இறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது ஏகே 47 ரக துப்பாக்கியின் நவீன தயாரிப்பாகும்.

ஏகே 47 203 என்ற நவீன ரக துப்பாக்கிகளை ரஷ்யாவிடம் இருந்து வாங்குவதற்கான ஒப்பந்தத்தை இந்தியா இறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இது ஏகே 47 ரக துப்பாக்கியின் நவீன தயாரிப்பாகும். தற்போது இந்திய ராணுவத்திற்கு அந்த ரகத்தை சேர்ந்த 7 லட்சத்து 70 ஆயிரம் துப்பாக்கிகள் தேவைப்படும் நிலையில் ஒரு லட்சம் துப்பாக்கிகளை ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் இந்தியா, மற்றவற்றை உள்நாட்டில் தயாரிக்க முடிவு செய்துள்ளதாக ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியா - ரஷ்யாவின் கூட்டு தயாரிப்பாக துப்பாக்கிகள் உற்பத்தி செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

எனினும் இதுபற்றி இந்திய அரசு தரப்பில் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. அதே போன்று உத்தரப்பிரதேசத்தின் கோர்வா ஆயுத தொழிற்சாலையில் ரஷ்யாவின் 7.62*39 எம்எம் துப்பாக்கி தலா 1100 டாலர் என்ற விலையில் உற்பத்தி செய்யப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments