’எங்கள் தாய் மொழியை ஒருபோதும் இழக்கமாட்டோம்’ - சீன அரசின் கல்விக் கொள்கைக்கு எதிராக வலுக்கும் மங்கோலியர்கள் போராட்டம்!

0 4162
சீனாவுக்கு எதிராக மங்கோலியர்கள் போராட்டம்

சீனாவின் வடக்குப் பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மங்கோலிய இன மக்கள் ஒன்று கூடி, ‘மங்கோலிய மொழிதான் எங்கள் தாய் மொழி. எங்கள் தாய்மொழியை ஒருபோதும் இழக்கமாட்டோம்’ என்று முழக்கமிட்டு சீன அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக  போராடி வருகின்றனர்.

சீனாவில் வசிக்கும் மங்கோலிய இன மக்கள் தங்கள் தாய் மொழியையே தனித்துவ அடையாளமாகவும், கலாச்சாரமாகவும் கருதுகின்றனர். அந்தக் கலாச்சாரத்தை நசுக்கி ஒருங்கிணைந்த சீன கலாச்சாரத்தை அவர்கள் மேல் புகுத்தும் நோக்கில், சமீபத்தில் சீன அரசு புதிய கல்விக்கொள்கையை அறிமுகப்படுத்தியது.

image

அதன் அடிப்படையில், சீன மொழிக்கு ஆதரவாக மற்ற மொழிகளைக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கையைப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் குறைக்கப்பட்டது. மேலும், மற்ற மொழிகளில் கற்றுக்கொடுக்கும் பாடங்களையும் சீன மொழிக்கு மாற்றப்பட்டன. இந்த அறிவிப்பைக் கேட்டு வெகுண்டெழுந்த சீன நாட்டில் வசிக்கும் மங்கோலிய இன மக்கள் பள்ளி மற்றும் வீடுகளுக்கு முன்பு திரண்டு, போராட்டம் நடத்தி வருகின்றனர்.

image

சீன அரசின் அடக்குமுறை குறித்து  மங்கோலிய மக்கள் கூறுகையில், “மங்கோலியர்களான எங்களுக்குத் தனித்துவ கலாச்சாரம், அடையாளங்கள் இருக்கின்றன. நாங்கள் சீன மொழியில் கற்பிக்கப்படுவதை ஏற்றுக்கொண்டால் மங்கோலியன் மொழி உண்மையிலேயே அழிந்துவிடும்.  தொலைக்காட்சியில் கூட சீன மொழியில் தான் அனைத்து நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. கார்டூன் கூட சீன மொழியிலேயே ஓடுகின்றன. சீன மொழியை எங்கள் மீது திணிப்பதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்” என்கின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments