அரசு மேல்நிலைப்பள்ளி கணினி பயிற்றுநர்களுக்கு பதவி உயர்வு

0 1872
அரசு மேல்நிலைப்பள்ளி கணினி பயிற்றுநர்களுக்கு பதவி உயர்வு

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வந்த 904 கணினி பயிற்றுநர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பான செய்திக்குறிப்பில், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் 11 மற்றும் 12ஆம் வகுப்பில் கணிணி பாடம் எடுக்க 904 கணினி பயிற்றுநர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஊதிய விகிதத்தில் நியமிக்கப்பட்டனர்.

அவர்களுக்கு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களின் ஊதிய விகிதத்துக்கு இணையாக நிலை 1-க்கு 904 பேருக்கு பதவி உயர்வு வழங்கியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

2019 பிப்ரவரி 12ஆம் தேதி முதல் இப்பதவி உயர்வு அமலுக்கு வருவதாகவும், அன்று முதல் இன்று வரை, அவர்களின் ஊதியத்தைக் கணக்கிட்டு வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments