ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவல்னிக்கு விஷம் வைக்கப்பட்டுள்ளது - ஜெர்மனி பிரதமர்
ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவல்னி உடல்நிலை சீர்குலைந்ததற்கு,
மத்திய நரம்பு மண்டலத்தை தாக்கும் விஷம் வைத்து கொலை செய்ய நடைபெற்ற முயற்சியே காரணம் என ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.
அலெக்சிக்கு ஜெர்மனியின் பெர்லின் நகரில் உள்ள Charite மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அந்த மருத்துவமனையின் வேண்டுகோளின்பேரில், ராணுவ ஆய்வகத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில், நோவிசோக் எனப்படும், மத்திய நரம்பு மண்டலத்தை தாக்கும் நச்சுப்பொருளை பயன்படுத்தி, நவல்னியை கொலை செய்ய முயற்சி நடைபெற்றுள்ளது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக, ஜெர்மனி பிரதமரின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
இதற்கு ரஷ்ய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என ஜெர்மனி, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.
Comments