திமுக பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு வேட்புமனு தாக்கல்

0 2792
திமுக பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு இன்று வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது.

திமுக பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். திமுக பொதுச்செயலாளர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் துரைமுருகன், பொருளாளர் பதவியில் இருந்து விலகினார்.

திமுக பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு இன்று வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது.

ஆலந்தூர் எம்எல்ஏ தா.மோ.அன்பரசன், தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா., பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதி ஆகியோர், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகனுக்காகவும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவுக்காகவும் வேட்புமனு தாக்கல் செய்ததாக தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, திமுக பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு நேரடியாக வேட்புமனு தாக்கல் செய்தார்.

திமுக பொதுச் செயலாளர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் துரைமுருகன், அதற்கு வசதியாக பொருளாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்பில்லை எனக் கூறப்படும் நிலையில், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு துரைமுருகன், டி.ஆர்.பாலு போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு, வரும் 9ஆம் தேதி நடைபெறும் திமுக பொதுக்குழுவில் வெளியாகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments