செமஸ்டர் கட்டணங்களை செலுத்த கூறி அண்ணா பல்கலைகழக சுற்றறிக்கையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

0 2607
செமஸ்டர் கட்டணங்களை செலுத்த கூறி அண்ணா பல்கலைகழக சுற்றறிக்கையை எதிர்த்து மனு தாக்கல்

செப்டம்பர் 5ம் தேதிக்குள் செமஸ்டர் கட்டணங்களை செலுத்தாத மாணவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்ற அண்ணா பல்கலைக்கழக உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் - நவம்பர் செமஸ்டருக்கான கட்டணத்தை ஆகஸ்ட் 30ம் தேதிக்குள் செலுத்த உத்தரவிட்ட அண்ணா பல்கலைகழகம், தவறினால் அபராதத்துடன் செலுத்தவும் கெடு விதித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

அதனை ரத்து செய்யக் கோரி இந்திய மாணவர் சங்க மாநில செயலாளர் மாரியப்பன் தாக்கல் செய்த மனுவில், ஊரடங்கு சமயத்தில் மாணவர்கள் பயன்படுத்தாதவற்றிற்கும் கட்டணம் செலுத்த கூறுவதாகவும், எனவே 40 சதவீத கல்வி கட்டணத்தை தவிர்த்து ஆய்வகம், நூலகம், கணினி மையம் உள்ளிட்டவற்றுக்கான 60 சதவீத கட்டணத்தை ரத்து செய்யவும் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரப்பட்ட நிலையில், அதனை ஏற்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் நாளை வழக்கை விசாரிப்பதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments