போர்டு கார் நிறுவனம் 1,400 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டம் எனத் தகவல்
லாபத்தில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக ஆயிரத்து 400 பேருக்கு பணி ஓய்வு அளிக்க போர்டு கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
10 ஆண்டுகளுக்கான மொத்த நஷ்டமும் இந்த ஓராண்டில் ஏற்படும் என்று எதிர்பார்ப்பதாக போர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், நிறுவனத்தின் மறு சீரமைப்பின் ஒரு பகுதியாக தனது அமெரிக்க ஊழியர்களில் 5 சதவீத பேருக்கு ஊதியம் வழங்குவதை நிறுத்தும் பொருட்டு ஒயிட் காலர் ஊழியர்களுக்கு பங்குகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, 30 ஆண்டுக்கு பணியாற்றுவோர், 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் 55 வயதுக்கும் மேற்பட்டோர், 5 ஆண்டுக்கு மேல் பணியாற்றும் 65 வயதுக்கும் மேற்பட்ட அமெரிக்க ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வின் அடிப்படையில் பங்குகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக போர்ட் நிறுவன தகவல்கள் தெரிவித்துள்ளன.
Comments