தமிழகத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் பாரத் நெட், தமிழ்நெட் திட்டம் 18 மாதங்களில் நடைமுறைக்கு வரும் - அமைச்சர் உதயகுமார்

0 1713
தமிழகத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் பாரத் நெட், தமிழ்நெட் திட்டம் 18 மாதங்களில் நடைமுறைக்கு வரும் - அமைச்சர் உதயகுமார்,

தமிழகத்தின் அனைத்து ஊராட்சிகளையும் அதிவேக இணையத்தின் வழியே இணைக்கும் பாரத் நெட் மற்றும் தமிழ் நெட் திட்டம் 18 மாதங்களில் நடைமுறைக்குக் கொண்டு வரப்படும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டமைப்பு மாநாடு இணையவழியில் நடைபெற்றது.

இதில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் உதயகுமார் ஆகியோர் காணொலியில் பங்கேற்றனர்.

அப்போது பேசிய அமைச்சர் உதயகுமார் தமிழகத்தின் 12 ஆயிரத்து 525 ஊராட்சிகளிலும் 1 ஜி.பி.பி.எஸ் வேகத்தில் இணைய வசதி கொடுக்கப்படும் எனத் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments