சென்னையில் மருத்துவ முகாம்கள் மூலம் 21,309 பேருக்கு கொரோனா கண்டுபிடிப்பு

0 1758
சென்னையில் மருத்துவ முகாம்கள் மூலம் 21,309 பேருக்கு கொரோனா கண்டுபிடிப்பு

சென்னையில் கடந்த மே 8ம் தேதி முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரை மருத்துவ முகாம்கள் மூலம் மட்டும் 21,309 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும், நாள்தோறும் மருத்துவ  முகாம்கள் நடத்தி பொதுமக்களின் உடல்நிலை பரிசோதிக்கப்பட்டது. அறிகுறிகள் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அந்தவகையில் இதுவரை 41,651 மருத்துவ முகாம்கள் மூலம் 22 லட்சத்து 29 ஆயிரம் பேரை பரிசோதனை செய்ததாகவும், அதில் அறிகுறிகளுடன் இருந்த 1 லட்சத்து 28 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 21,309 பேருக்கு தொற்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments