ரயில்வே வாரியத்திற்கு முதல் தலைமை நிர்வாகியாக வி.கே யாதவை நியமிக்க மத்திய அமைச்சரவை நியமனக்குழு ஒப்புதல்

0 1556
ரயில்வே வாரியத்திற்கு முதல் தலைமை நிர்வாகியாக வி.கே யாதவை நியமிக்க மத்திய அமைச்சரவை நியமனக்குழு ஒப்புதல்

 ரயில்வே வாரியத்தின் முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக வி.கே யாதவை நியமிக்க, மத்திய அமைச்சரவை நியமனக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. 

ரயில்வே வாரியத்தில் உள்ள பொறியியல், போக்குவரத்து, மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் உள்ளிட்ட 8 துறைகள் ஒன்றிணைக்கப்பட்டு, இந்திய ரயில்வே பணி என்ற ஒரே துறையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

150 ஆண்டுகாலமாக இருந்துவரும் ரயில்வே வாரியத்தை மறுசீரமைக்கும் வகையில், அதன் உறுப்பினர் எண்ணிக்கை 8ல் இருந்து 5 ஆகக் குறைக்கப்படுகிறது. இந்நிலையில், ரயில்வே வாரியத்தின் தலைவராக உள்ள வி.கே யாதவ், தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் உரிய முடிவுகளை துரிதமாகவும், சுதந்திரமாகவும் எடுக்க முடியும் என ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments