புதிய விண்மீன் திரளைக் கண்டுபிடித்ததற்காக இந்திய வானியல் விஞ்ஞானிகளுக்கு நாசா பாராட்டு
புதிய விண்மீன் திரளைக் கண்டுபிடித்ததற்காக இந்திய வானியல் விஞ்ஞானிகளுக்கு நாசா பாராட்டுத் தெரிவித்துள்ளது.
பூமியிலிருந்து 9 புள்ளி 3 பில்லியன் ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள புதிய விண்மீன் திரளை இந்தியாவின் ஆஸ்ட்ரோசாட் விண்கலத்தில் பொருத்தப்பட்டிருந்த தொலைநோக்கி மூலம் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
அந்த விண்மீன் திரள்களில் இருந்து வெளிப்பட்ட தீவிர புறஊதாக் கதிர்கள் மூலம் அந்தக் கூட்டத்தை புனேயில் உள்ள வானியல் பல்கலைக்கழக விஞ்ஞானி கனக்சஹா தலைமையிலான குழு கண்டுபிடித்தது.
இதையடுத்து இந்திய விஞ்ஞானிகளுக்கு நாசா அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், விஞ்ஞானம் என்பது உலகெங்கிலும் உள்ள கூட்டு முயற்சி என்று தெரிவித்துள்ளது. மற்றும் இது போன்ற கண்டுபிடிப்புகள் நாம் எங்கிருந்து வருகிறோம், எங்கு செல்கிறோம், நாம் தனியாக இருக்கிறோம் என்பதைப் பற்றி மனிதகுலத்தின் புரிதலுக்கு மேலும் உதவுகின்றன என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments