பயணிகள் ரயில் சேவை... சிறப்பு ரயில்களுக்கு அனுமதி
தமிழகத்தில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட ரயில் தடங்களுடன், மாநிலத்திற்குள்ளான பயணியர் ரயில் சேவை வரும் 7ம் தேதி தொடங்குகிறது.
சென்னை மெட்ரோ ரயில்சேவை வரும் 7ந் தேதி தொடங்கும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், மாநிலத்திற்குள் ஆன பயணிகள் ரயில் சேவையை செப்டம்பர் 7ம் தேதி முதல் தொடங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, ஐந்தரை மாதங்களுக்குப் பிறகு தமிழகத்தில் மீண்டும் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
குறிப்பிட்ட ரயில் தடங்களில் ஏற்கனவே இயக்கி ரத்து செய்யப்பட்ட சிறப்பு ரயில்களை மீண்டும் இயக்க தெற்கு ரயில்வே நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, திருச்சி - செங்கல்பட்டு சூப்பர் பாஸ்ட் ரயில், மதுரை- விழுப்புரம், கோவை - காட்பாடி, திருச்சி - செங்கல்பட்டு, அரக்கோணம் - கோவை, கோவை - மயிலாடுதுறை, திருச்சி - நாகர்கோவில் ஆகிய 7 வழித்தடங்களில், வரும் திங்கட்கிழமை முதல் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட உள்ளது. அதேசமயம் ரயில் போக்குவரத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
விரைவு ரயில்கள் மற்றும் மின்சார ரயில் போக்குவரத்து குறித்து தெற்கு ரயில்வே இன்று அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments