அரசுப் பணிகளில் மிகப்பெரிய சீர்திருத்தம் கொண்டுவர கர்மயோகி மிஷன் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

0 3956
அரசு நிர்வாகத்தில் மிகப்பெரிய சீர்திருத்தம் என வருணிக்கப்படும் கர்மயோகி மிஷன் எனும் புதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

அரசு நிர்வாகத்தில் மிகப்பெரிய சீர்திருத்தம் என வருணிக்கப்படும் கர்மயோகி மிஷன் எனும் புதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

அனைத்து மட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு புதிய மனித வளப் பயிற்சிகளை இத்திட்டம் அளிக்க உள்ளது.

இத்திட்டம் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், இத்திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களும் அதிகாரிகளும் திறம்பட செயல்படுவதற்கான வாய்ப்பு உருவாகும் என்றார்.

எதிர்காலத்தில் அரசு ஊழியர்கள் படைப்பாற்றல், முற்போக்கு எண்ணங்களுடன் தொழில்நுட்பத் துறையிலும் சிறந்து செயல்பட இத்திட்டம் பயிற்சி அளிக்கும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments