பீகார் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு இந்த வாரம் வெளியிடப்படலாம் என தகவல்
பீகார் சட்டப்பேரவை தேர்தல் தேதி இந்த வாரம் வெளியிடப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. GFX IN 243 இடங்களை கொண்ட சட்டப்பேரவை பதவிக்காலம், நவம்பர் மாதம் 29ம் தேதியுடன் நிறைவடைகிறது.
இதையடுத்து சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. கொரோனா பரவல் இருப்பதால், தேர்தலை நடத்துவது குறித்த வழிகாட்டுதல்களையும் உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த வாரத்தில் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
Comments