உழவர் உதவித் தொகைத் திட்டத்தில் போலிப் பயனாளிகளைச் சேர்த்து முறைகேடு செய்தவர்களிடம் இருந்து ரூ.4.2 கோடி பறிமுதல்
கடலூர் மாவட்டத்தில் உழவர் உதவித் தொகைத் திட்டத்தில் முறைகேடு செய்தவர்களிடமிருந்து 4 கோடியே 20 லட்ச ரூபாயை மாவட்ட ஆட்சியர் பறிமுதல் செய்துள்ளார். மத்திய அரசால் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு ஆறாயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தில் ஏப்ரல் மாதம் முதல் கடலூர் மாவட்டத்தில் 80 ஆயிரத்து 752 பேர் பயனாளிகளாகச் சேர்க்கப்பட்டது குறித்து ஆய்வு செய்ய ஆட்சியர் சந்திரசேகர சாகமூரி உத்தரவிட்டார்.
முதற்கட்ட விசாரணையில் 40 ஆயிரம் பேர் வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தது. இதையடுத்து அவர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்ட 4 கோடியே 20 லட்ச ரூபாயைப் பறிமுதல் செய்து கடலூர் மாவட்ட ஆட்சியர் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
Comments