மெட்ரோ ரயில் சேவை - வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

0 2127
வரும் 7 ஆம் தேதி முதல் இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

வரும் 7 ஆம் தேதி முதல் இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் புரி, கொரோனா நோய் கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என்றார்.

பயணிகள் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும் என்றும், உடல் வெப்ப சோதனைக்குப் பின் கொரோனா அறிகுறியற்ற நபர்கள் தான் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சமூக இடைவெளியை கடைபிக்க ஏதுவாக, மெட்ரோ ரயில்களில் ஏறும் போதும் இறங்கும் போதும் போதிய நேரம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments