40 சதவீதத்துக்கு மேல் கட்டணம் வசூல் செய்த தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை

0 2609
40 சதவீதத்துக்கு மேல் கட்டணம் வசூல் செய்த தனியார் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, அதுகுறித்த அறிக்கையை நாளைக்குள் (செப்.3) அனுப்பும்படி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அதிக கல்விக் கட்டணம் வசூல் செய்யும் தனியார் பள்ளிகள் மீது பெற்றோர்கள் புகார் அளிக்க பிரத்யேக மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி அறிவிக்க வேண்டும் என்றும், அதில் பெற்றோர்கள் தங்களது புகாரை தெரிவிக்கலாம் என்றும் பள்ளிக் கல்வித்துறை கூறியுள்ளது.

அதிக கட்டணம் வசூலித்த தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டு அவர்களின் பட்டியல் உயர் நீதிமன்றத்தில் அளிக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வி துறை குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments