சென்னை மாநகரப் பேருந்தில் பயணிக்க மாதாந்திரப் பயணச்சீட்டு வழங்கும் பணி தொடக்கம்
சென்னை மாநகரப் பேருந்துகளில் விருப்பம் போல் பயணம் செய்வதற்கான 1000 ரூபாய் பயணச் சீட்டுகள் பணிமனைகளிலும் பேருந்து நிலையங்களிலும் வழங்கப்பட்டு வருகின்றன.
மாதாந்திரச் சலுகைப் பயணச் சீட்டு வழங்கும் பணி இன்று முதல் தொடங்கும் எனப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று முதல் சென்னையில் உள்ள அனைத்துப் பணிமனைகளிலும் பயணச்சீட்டு விற்பனை மையங்கள் திறக்கப்பட்டு மாதாந்திரச் சலுகைப் பயணச்சீட்டுகள் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் வாங்கிய மாதாந்திரப் பயணச் சீட்டுகள் செப்டம்பர் 15 வரை செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், அதற்குப் பின் பயன்படுத்துவதற்கான பயணச் சீட்டுகள் இப்போது வழங்கப்படுகிறது.
Comments