ஆஸ்திரேலியாவில் ஏப்ரல் - ஜூன் காலத்தில் பொருளாதாரம் 7சதவிகிதம் வீழ்ச்சி
ஆஸ்திரேலியாவில் முப்பது ஆண்டுகளுக்குப் பின் முதன்முறையாகப் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் கொரோனா தொற்றால் அந்நாட்டின் பொருளாதாரம் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் 7 விழுக்காடு வீழ்ச்சியடைந்தது.
1991ஆம் ஆண்டுக்குப் பின் அந்நாட்டில் மீண்டும் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது. மார்ச் மாதத்துக்குப் பின் இதுவரை 10 லட்சத்துக்கு மேற்பட்டோர் வேலையிழந்துள்ளனர். இதனால் பொருளாதாரத்தை ஊக்குவிக்க 16 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஊக்குவிப்புத் திட்டத்தை ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.
Comments