அகமதாபாத் - டெல்லி இடையே புல்லட் ரயில் பாதை அமைக்கத் திட்டம்

0 1323

அகமதாபாத் - டெல்லி இடையே புல்லட் ரயில் திட்டத்துக்கான தரவுகளைச் சேகரிக்க டெண்டர்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

மும்பை - அகமதாபாத் இடையே 508 கிலோமீட்டர் தொலைவுக்கு புல்லட் ரயில் பாதை அமைக்கும் திட்டத்தைத் தேசிய அதிவிரைவு ரயில் கழகம் செயல்படுத்தி வருகிறது. இந்த நிறுவனம் அடுத்த கட்டமாக அகமதாபாத் - டெல்லி இடையே 886 கிலோமீட்டர் தொலைவுக்கு புல்லட் ரயில் பாதை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

இதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்குத் தேவையான தரவுகளைச் சேகரிக்க நிறுவனங்களிடம் இருந்து டெண்டர்களை வரவேற்றுள்ளது. இந்தப் பாதையில் உள்ள ஆறுகள், கால்வாய்கள், ரயில்பாதைகள், சாலைகள் ஆகியவற்றின் மீது பாலங்களுக்கான பொது ஏற்பாட்டு வரைபடங்கள் தயாரிப்பதற்கான டெண்டர்களையும் வரவேற்றுள்ளது.b

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments