ஊழல் செய்ததாக 2 சவூதி இளவரசர்கள் அதிரடியாக நீக்கம்
ராணுவ அமைச்சகத்தில் ஊழல் செய்ததாக முக்கிய பதவிகளில் இருந்த சவுதி அரேபிய இளவரசர்கள் 2 பேரை மன்னர் சல்மான் அதிரடியாக நீக்கி உள்ளார்.
ஏமனில் சண்டையிட்டு வரும் சவுதி தலைமையிலான கூட்டுப் படைகளின் கமாண்டர் இளவரசர் ஃபகத் பின் துர்கி, சவுதி அரேபியாவின் வட மேற்கு பிராந்தியமான அல் ஜூப் துணை ஆளுநராக இருந்த அப்துல்லா அஜிஸ் பின் ஃபகத் ஆகியோரே பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ராணுவ அமைச்சகத்தில் சந்தேகத்திற்கு இடமான நிதி பரிவர்த்தனை நடந்ததில் இவர்கள் இருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்ததையடுத்து , பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானின் பரிந்துரையின் பேரில் அவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது ஊழல் வழக்கு விசாரணையை துவக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Comments