செப்டம்பர் 7 முதல் கீழமை நீதிமன்றங்களில் நேரடி விசாரணை நடத்த அனுமதி
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் செப்டம்பர் 7 முதல் நேரடி விசாரணை நடத்தச் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
தமிழகத்தின் 29 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கீழமை நீதிமன்றங்கள் செயல்படத் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான நிர்வாகக் குழு அனுமதி அளித்துள்ளதால் அவை செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள கீழமை நீதிமன்றங்களிலும் செப்டம்பர் 7 முதல் நேரடி விசாரணை மேற்கொள்ள அனுமதிப்பது என உயர்நீதிமன்ற நிர்வாகக் குழு முடிவெடுத்துள்ளது.
இருவாரங்கள் நடைபெறும் நீதிமன்றப் பணிகள் குறித்து மீண்டும் செப்டம்பர் 22ஆம் தேதி மறு ஆய்வு செய்யப்படும் என உயர் நீதிமன்றத் தலைமைப் பதிவாளர் குமரப்பன் அறிவித்துள்ளார்.
Comments