செய்திகள் பகிரும் வசதியையே நிறுத்த போவதாக ஆஸ்திரேலிய அரசுக்கு பேஸ்புக் நிறுவனம் மிரட்டல்

0 1051
பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் செய்திகள் பகிரும் வசதியையே நிறுத்த போவதாக ஆஸ்திரேலியா அரசுக்கு பேஸ்புக் நிறுவனம் மிரட்டல் விடுத்துள்ளது.

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் செய்திகள் பகிரும் வசதியையே நிறுத்த போவதாக ஆஸ்திரேலியா அரசுக்கு பேஸ்புக் நிறுவனம் மிரட்டல் விடுத்துள்ளது.

ஊரடங்கால் ஆஸ்திரேலியாவில் ஊடகங்கள் விளம்பர வருமானத்தை இழந்து வரும் நிலையில், ‘பேஸ்புக்’ ‘கூகுள்’ போன்ற டிஜிட்டல் தளங்கள் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை வெளியிட்டு வருமானம் பார்த்து வருகின்றன. இந்நிலையில் ஊடக செய்திகளை பேஸ்புக், கூகுள் நிறுவனங்கள் வெளியிட்டால் அதற்குரிய கட்டணத்தை ஊடக நிறுவனங்களுக்கு செலுத்த வழிவகை செய்யும் வகையில் சட்டம் கொண்டுவர ஆஸ்திரேலிய அரசு முடிவெடுத்துள்ளது.

இதனால் கூகுள், பேஸ்புக் போன்ற நிறுவனங்களின் 6 பில்லியன் டாலர் விளம்பர வருவாய், செய்தி நிறுவனங்களுக்கு செல்ல நேரிடும் என்பதால், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் செய்திகள் பகிரும் வசதியையே நிறுத்த போவதாக பேஸ்புக் நிறுவனம் மிரட்டல் விடுத்துள்ளது. கூகுள் நிறுவனமும் ஆஸ்திரேலிய அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments