போலி ஆவணங்கள் மூலம் வங்கி கடன் மோசடி ... ரூ.20.65 கோடி சொத்துக்கள் முடக்கம்
போலி ஆவணங்கள் மூலம் வங்கி கடன் மோசடியில் ஈடுபட்டவருக்கு சொந்தமான 20 கோடி ரூபாய் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த கலீல் ரகுமான், சிராஜூதீன் ஆகியோர் போலி ஆவணங்கள் மூலம், இந்திய வங்கி கிண்டி கிளையில் 23 கோடியே 46 லட்சம் ரூபாய் கடன் பெற்று அதைத் திருப்பி செலுத்தவில்லை என தெரியவந்தது.
இது தொடர்பான புகாரின் பேரில் கலீல் ரகுமான், சிராஜூதீன் மற்றும் வங்கி மேலாளர் பூவாட்டில் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இவர்கள் மோசடி செய்து சொத்துக்கள் வாங்கியது உறுதியானதால் கலீல் ரகுமானுக்கு சொந்தமான வாணியம்பாடி கோனமேடு தொழிற்பேட்டையில் உள்ள இடம், சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பு உள்பட 20 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
Comments