சிஎஸ்கே வீரர்கள், உதவி பணியாளர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என தகவல்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் மற்றும் உதவி பணியாளர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகடிவ் என முடிவு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் போட்டியில் விளையாட ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்ற நிலையில் தீபக் சாகர், ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய 2 வீரர்களுக்கு கொரோனா உறுதியானது.
இதையடுத்து 2 பேரும் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கும், மற்ற வீரர்களுக்கும், உதவி பணியாளர்களுக்கும் நடத்தப்பட்ட சோதனையில் அனைவருக்கும் நெகடிவ் வந்திருப்பதாகவும், கடைசியாக 3ம் தேதி பரிசோதனை நடத்தப்பட்டு, அதிலும் நெகடிவ் வந்தால் 5ம் தேதி முதல் பயிற்சியில் ஈடுபட அனுமதி அளிக்கப்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
Comments