உலக பணக்காரர்கள் பட்டிலில் 3வது இடத்துக்கு முன்னேறிய எலோன் மஸ்க்... 4 வது இடத்துக்கு தள்ளப்பட்ட மார்க் ஜுக்கர்பெர்க்
டெஸ்லா பங்குகள் உயர்வால், உலகப் பணக்காரர்கள் பட்டியலில் பேஸ்புக் இணை நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கை பின்னுக்கு தள்ளி எலோன் மஸ்க் 3வது இடத்தை பிடித்துள்ளார்.
டெஸ்லா பங்குகள் 475 சதவீதக்கும் அதிகமாக உயர்ந்ததால் அதன் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலன் மஸ்கின் நிகர சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் 5 லட்சத்து 55 ஆயிரம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், ப்ளூம்பெர்க் புள்ளிவிவரத்தின் படி, உலக பணக்காரர்கள் பட்டியலில் அமேசானின் ஜெஃப் பெசோஸ், பில் கேட்ஸ்க்கு அடுத்தபடியாக 8 லட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் டெஸ்லாவின் எலோன் மஸ்க் 3வது இடத்தில் உள்ளார்.
8 லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் பேஸ்புக்கின் மார்க் ஜுக்கர்பெர்க் 4 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
Comments