துப்பாக்கி குண்டுகள் முழங்க முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல் தகனம்..

0 4822
துப்பாக்கி குண்டுகள் முழங்க பிரணாப் முகர்ஜியின் உடல் தகனம்..

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல், டெல்லி லோடி ரோடு மயானத்தில் ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

ராஜாஜி மார்க்கில் உள்ள அவரது வீட்டில் இருந்து ராணுவ வீரர்களின் அணிவகுப்புடன், பிரணாப்பின் உடல் அலங்கரிக்கப்பட்ட வேனில் கொண்டு செல்லப்பட்டது.

இறுதி ஊர்வலம் லோடி ரோடு மயானத்தை வந்து அடைந்ததும், அலங்கரிக்கப்பட்ட மேடையில் வைக்கப்பட்ட உடலுக்கு பிரணாப்பின் மகன் அபிஜித் முகர்ஜி இறுதிச் சடங்குகளை செய்தார். அதன் பின்னர் துப்பாக்கி குண்டுகள் முழங்க பிரணாப்பின் உடல் எரியூட்டப்பட்டது.

முன்னதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பிரணாப் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments