டெல்லியில் சுமார் 2 லட்சம் ஓலா-ஊபர் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்
கடனை செலுத்த கூடுதல் கால அவசகாசம், கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி டெல்லியில் ஊபர் மற்றும் ஓலா டாக்சி ஓட்டுநர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம் செய்கின்றனர்.
இந்த கோரிக்கைகள் மீது டெல்லி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், வேலைநிறுத்தம் செய்வதாகவும், அதில் சுமார் 2 லட்சம் ஓட்டுநர்கள் பங்கேற்பதாகவும் கூறப்படுகிறது.
வங்கி தவணைகளுக்கான கால நீட்டிப்பு நேற்று முடிவடைந்துள்ள நிலையில், மாத தவணைகளை உடனே செலுத்துமாறு வங்கிகள நெருக்கடி அளிப்பதாக ஓட்டுநர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மெட்ரோ, பேருந்து சேவைகள்துவக்கப்படாத நிலையில், இந்த வேலைநிறுத்தத்தால் டெல்லி பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
Comments