டெட் தேர்வு எழுதி 7ஆண்டு நிறைவு செய்தோருக்கு புதிய அறிவிப்பு
தமிழகத்தில் டெட் தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்து 7ஆண்டு நிறைவு செய்தவர்கள் மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு தளர்வைத் தொடர்ந்து சென்னை கோட்டூர்புரத்தில் திறக்கப்பட்ட அண்ணாநூற்றாண்டு நூலகத்தை ஆய்வு செய்தவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் 160 நாட்களுக்குப் பின் 3785 நூலகங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும், புதிய கல்வி கொள்கை தொடர்பான குழு அமைப்பது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் எனவும், பள்ளிகள் திறப்பு குறித்து தற்போது யோசிக்கும் நிலை இல்லை என்றும் அவர் கூறினார்.
Comments