இந்தோனேசியாவில் கொரோனா மருத்துவக் கழிவுகளால் மாசடைந்த சிசடேன் ஆறு
இந்தோனேசியாவில் டன் கணக்கில் கொட்டப்படும் கொரோனா மருத்துவக் கழிவுகளால் மாசடைந்த சிசடேன் ஆற்றை சுத்தம் செய்யும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த மார்ச் முதல் ஜூன் வரை ஒவ்வொரு நாளும் தலா ஆயிரத்து 500 டன் வரை கொரோனா மருத்துவ கழிவுகள் உற்பத்தி செய்யப்படுவதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், டாங்கேராங்கில் மருத்துவக்கழிவுகள் மலைப்போல் குவித்து வைக்கப்பட்ட நிலையில், சரிந்து அருகில் உள்ள சிசடேன் ஆற்றின் கலந்தது.
ஆற்றுத் தண்ணீரை பயன்படுத்தும் சுற்றுவட்டார மக்களுக்கு இதனால் கொரோனா பரவும் அபாயம் உள்ளதாக புகார் எழுந்துள்ள நிலையில், மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்த புதிய நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசிய சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments