பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல்

0 1723
பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல்

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு, உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வங்கதேசம் ஒரு நல்ல நண்பரை இழந்து விட்டதாக அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பிராணாபின் மறைவு செய்தியை கேட்டு தான் மிகவும் கவலையுற்றதாக, இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

இந்தியா - ரஷியா இடையேயான உறவை வலுப்படுத்துவதில் தனிப்பட்ட கவனம் செலுத்திய, பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக விளாடிமிர் புதின் கடிதம் எழுதியுள்ளார்.

இதேபோன்று, அமெரிக்கா, இஸ்ரேல், ஆப்கானிஸ்தான் மற்றும் மாலத்தீவு போன்ற நாடுகளின் தரப்பிலும், பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments