நாட்டிலேயே முதன்முறையாக 108 ஆம்புலன்சை இயக்கும் பெண் ஓட்டுநர்.. வீரமங்கை வீரலட்சுமி..!
கொரோனா காலத்தில் உரிய நேரத்தில் நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உதவும் வகையில், புதிதாக 118 ஆம்புலன்ஸ்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார்.
ஆயிரத்து ஐந்து 108 ஆம்புலன்ஸ்கள் தற்போது இயங்கி வரும் நிலையில், 103 கோடி ரூபாய் செலவில் மேலும் 500 ஆம்புலன்ஸ்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் முதல்கட்டமாக, 118 ஆம்புலன்ஸ்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார்.
இதில் ஒரு வாகனத்தை, நாட்டிலேயே முதன்முறையாக 108 ஆம்புலன்ஸ் பெண் ஓட்டுநராக நியமிக்கப்பட்ட வீரலட்சுமி என்பவர் இயக்கினார். திருவொற்றியூரில் வசித்துவரும் இவர், கொரோனா காலத்தில் 100க்கும் மேற்பட்ட நோயாளிகளை அழைத்துச் சென்றுள்ளார்.
Comments