திருப்பதி கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு செப்.14ல் தண்ணீர் திறப்பு

0 1087
திருப்பதி கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு செப்.14ல் தண்ணீர் திறப்பு

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து சென்னை பூண்டி ஏரிக்கு வரும் 14ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த தெலுங்கு கங்கை திட்ட முதன்மை பொறியாளர் ஹரிநாத் ரெட்டி, தற்போது ஸ்ரீசைலம் அணையிலிருந்து 23 ஆயிரம் கன அடி தண்ணீர் சோமசீலா அணைக்கு வந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

கண்டலேறு அணையில் தற்போது 23 டி.எம்.சி.தண்ணீர் இருப்புள்ளதாகக் கூறிய அவர், செப்டம்பர் 14ஆம் தேதி முதல் அல்லது கண்டலேறு அணையில் 30 டிஎம்சி தண்ணீர் வரத்து வந்த பிறகு சென்னைக்கு தண்ணீர் திறக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments