2023க்குள் அனைத்து ரயில் நிலையங்களும் மின்மயமாக்கப்படும் - பியூஷ் கோயல்
இந்தியாவில் 960 ரயில் நிலையங்கள் சூரிய மின்சார மயமாக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
2030ம் ஆண்டுக்குள் ரயில்வே மூலம் ஏற்படும் கார்பன் உமிழ்வு பூஜ்யம் அளவுக்கு கொண்டுவரப்படும் என ட்விட்டர் பதிவு ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, அடுத்த மூன்றாண்டுகளில் இந்தியாவிலுள்ள அனைத்து ரயில் பாதைகளும் மின்மயமாக்கப்படும் என ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது.
ரயில்களை இயக்க அதிக மின்சாரம் தேவைப்படும் என்பதால், ரயில்வே துறைக்கு சொந்தமான பயன்பாடில்லாத உபரி நிலங்களில் 20 ஜிகாவாட் சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
Comments