தமிழகத்தில் உள்ள அரசு பொது நூலகங்கள் இன்று முதல் திறப்பு

0 1988
தமிழகத்தில் உள்ள அரசு பொது நூலகங்கள் இன்று முதல் திறப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த அரசு பொது நூலகங்கள், ஐந்து மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் திறக்கப்படவுள்ளன.

இந்த நிலையில் நூலகங்கள் பின்பற்ற வேண்டிய கொரோனா கால வழிகாட்டு நெறிமுறைகளை பொது நூலக இயக்ககம் வெளியிட்டுள்ளது.

அதன் படி, நூலகங்கள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை அனைத்து பணி நாள்களிலும் வாசகர்கள் பயன்பாட்டிற்கு செயல்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நூலகங்களில் கிருமி நாசினி,முக கவசம் அணிதல்,வெப்ப பரிசோதனை உள்ளிட்டவை கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் என்றும், கட்டுப்பாட்டு மண்டலங்களில் அமைந்துள்ள நூலகங்களை திறக்க அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை நூலகத்தைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments