தமிழகத்தில் உள்ள 20 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டண உயர்வு அமலுக்கு வந்தது
தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் உயர்த்தப்பட்ட கட்டணம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் 20 இடங்களில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்வதாக அறவிக்கப்பட்டது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் ஒமலூர், வீரசோழபுரம், மேட்டுப்பட்டி, நத்தக்கரை, வைகுந்தம் பகுதியிலும், திருச்சி மாவட்டத்தில், சமயபுரம், பொன்னம்பலப்பட்டி, திருப்பராய்த்துறையில் உள்ள சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனை தவிர புதூர் பாண்டியபுரம், எலியார்பதி, கொடைரோடு, வேலஞ்செட்டியூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளிலும் புதிய கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வாகனங்களின் தரத்திற்கு ஏற்ப 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.
Comments