பிரணாப் மறைவை ஒட்டி 7 நாட்கள் நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும்
முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவை ஒட்டி நாடு முழுவதும் ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இன்று முதல் வரும் 6 ஆம் தேதி வரை, அரசு அலுவலகங்கள் மற்றும் கட்டிடங்களில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் என்றும், எந்த விதமான அரசு கொண்டாட்டங்களும் நடைபெறாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரணாப் முகர்ஜியின் அரசு ரீதியிலான இறுதி சடங்குகள் குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments