பிரணாப் மறைவு - தலைவர்கள் இரங்கல்..!

0 3117
முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு, குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு, குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் காலமான முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பிரணாப் முகர்ஜி சிறந்த அறிவாளி என்றும் உயர்ந்த அரசியல்வாதி என்றும் புகழஞ்சலி செலுத்தி உள்ளார்.

கட்சி வேறுபாடு இன்றி சமூகத்தின் அனைத்து பிரிவினராலும் பிரணாப் முகர்ஜி பாராட்டப்பட்டவர் என மோடி குறிப்பிட்டுள்ளார். ஆளுநர் பன்வாரிலால் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ஒரு சகாப்தம் முடிந்து விட்டதாக கூறியுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், பிரணாப்பின் மறைவு நாட்டுக்கே பேரிழப்பு என தெரிவித்துள்ளார்.

அவர் சிறந்த ஆட்சியாளராகவும், கடின உழைப்பாளியாகவும் இருந்தார் என பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். சாதுர்யம் மிக்க - அனுபவச் சக்ரவர்த்தி ஒருவரை இந்த நாடு இழந்துவிட்டதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், பிரணாப் முகர்ஜி இறப்பு செய்தி துரதிருஷ்டவசமானது என்றும் நாட்டு மக்களுடன் சேர்ந்து தானும் அவருக்கு மரியாதை செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

பிரணாப்பின் மறைவுக்கு மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments