மணல் கடத்தல் தொடர்பாக செய்தி வெளியிட்ட செய்தியாளரின் வீட்டுக்கே சென்று கொலை மிரட்டல்

0 1210

ஆந்திராவில் மணல் கடத்தல் குறித்து செய்தி வெளியிட்ட செய்தியாளரின் வீட்டில் மணல் கடத்தல் கும்பல் தாக்குதல் நடத்திய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

சித்தூர் மாவட்டம் சோமலாவில் ஆந்திரபிரபா என்ற நாளிதழின் நிருபராக பணியாற்றி வரும் வெங்கட் நாராயணா, அந்த பகுதியில் நடைபெறும் மணல் கடத்தல் பற்றி செய்தி வெளியிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணல் கடத்தல் கும்பலைச் சேர்ந்த இருவர் வெங்கட் நாராயாணா வீட்டுக்குச் சென்று கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

வீட்டில் இருந்த சமையல் பாத்திரங்கள், கேஸ் சிலிண்டர், வீட்டு உபயோக பொருட்களை எடுத்து வெளியே வீசி அடித்து நொறுக்கி அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.

இந்தத் காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில், தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments