சீன வீரர்கள் கட்டுப்பாட்டுக் கோட்டு எல்லையை ஒருபோதும் மீறியதில்லை - சீனா

0 2053
கிழக்கு லடாக் எல்லையில் பாங்காங்சோ ஏரியின் தென்கரையில் அத்துமீறலில் ஈடுபடவில்லை என மறுப்பு தெரிவித்துள்ள சீனா, கட்டுப்பாட்டுக் கோட்டு எல்லையை கண்டிப்பாக கடைப்பிடிப்பதாகவும் கூறியுள்ளது.

கிழக்கு லடாக் எல்லையில் பாங்காங்சோ ஏரியின் தென்கரையில் அத்துமீறலில் ஈடுபடவில்லை என மறுப்பு தெரிவித்துள்ள சீனா, கட்டுப்பாட்டுக் கோட்டு எல்லையை கண்டிப்பாக கடைப்பிடிப்பதாகவும் கூறியுள்ளது.

இந்த விவகாரத்தில், ஆத்திரமூட்டும் ராணுவ நடவடிக்கையில் சீனா இறங்கியதாகவும், இந்திய வீரர்கள் அதை முறியடித்து நிலையை பலப்படுத்தியதாகவும் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியிருந்தார்.

இந்நிலையில், சீன வீரர்கள் கட்டுப்பாட்டுக் கோட்டு எல்லையை எப்போதும் உறுதியாக பின்பற்றுவதாகவும், ஒருபோதும் எல்லை மீறியதில்லை என்றும் சீன வெளியுறவு செய்தித்தொடர்பாளர் ஜாவோ லிஜான் கூறியுள்ளார்.

களத்தில் இருதரப்பு படைகளுக்கும், அரசு நிலையிலும் நெருங்கிய தகவல் தொடர்பு இருப்பதாகவும், குறிப்பாக ஏதேனும் பேச்சுவார்த்தை நடைபெற்றிருந்தால் உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும் என்றும் ஜாவோ லிஜான் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments