அவசரகால ஆம்புலன்ஸ் சேவைக்கு முதல் பெண் ஓட்டுனரான வீரலட்சுமி
அவசரகால ஆம்புலன்ஸ் சேவைக்கு முதல் பெண் ஓட்டுனராக தமிழகத்தை சேர்ந்த வீரலட்சுமி பணியை தொடங்கியுள்ளார்.
சென்னை திருவேற்காட்டைச் சேர்ந்த இவர் கால்டாக்ஸி ஓட்டுநராக பணியாற்றி வந்த நிலையில் ஆம்புலன்ஸ் ஓட்டும் பணிக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் சரிபார்க்கப்பட்டு அவருக்கு தேனியில் ஒருமாதம் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, சென்னையில் இன்று முதலமைச்சர் புதிதாகத் தொடங்கிவைத்த 118, 108 ஆம்புலன்ஸ்களில் ஒன்றின் ஓட்டுநராக நியமிக்கப்பட்ட வீரலட்சுமி தன் பணியினைத் தொடங்கினார்.
Comments