உலகின் புதிய கொரொனா மையமாக மாறுகிறதா இந்தியா? அமெரிக்காவை முந்தபோகும் இந்தியா..?
உலகின் புதிய கொரோனா மையமாக இந்தியா வேகமாக மாறி வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வேறு எந்த நாடுகளிலும் இல்லாத அளவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை தினசரி தொற்று எண்ணிக்கை 78 ஆயிரத்து 761 ஆக அதிகரித்தது.
மேலும் 971 பேர் கொரோனாவுக்கு பலியானதை தொடர்ந்து உலகில் இறப்பு எண்ணிக்கையில் 3 வது இடத்திற்கு இந்தியா சென்று விட்டது.
இந்த வேகத்தில் இந்தியாவில் கொரோனா பரவினால், இன்னும் ஒரு வாரத்தில் பிரேசிலையும், ஒரு மாதத்தில் அமெரிக்காவையும் முந்திச்சென்று கொரோனாவில் உலகின் முதல் இடத்தை இந்தியா பிடித்து விடும் என அஞ்சப்படுகிறது.
Comments