ஜப்பான் பிரதமரை தேர்வு செய்ய 14ம் தேதி வாக்கெடுப்பு என தகவல்

0 1349
ஜப்பான் பிரதமரை தேர்வு செய்ய 14ம் தேதி வாக்கெடுப்பு என தகவல்

ஜப்பான் புதிய பிரதமரை தேர்வு செய்ய செப்டம்பர் 14ம் தேதி அந்நாட்டை ஆளும் லிபரல் டெமாகிராடிக் கட்சி (Liberal Democratic Party) வாக்கெடுப்பு நடத்தவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்தவரான ஷின்சோ அபே, உடல்நிலை காரணங்களுக்காக அண்மையில் பதவி விலகினார்.

இதையடுத்து அந்த பதவிக்கு புதியவரை தேர்வு செய்ய 14ம் தேதி அக்கட்சி வாக்கெடுப்பு நடத்தவுள்ளதாகவும், இதில் பாதுகாப்பு அமைச்சர் தாரோ கோனோ (Defence Minister Taro Kono), முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் சிகுரு இசிபா (former Defence Minister Shigeru Ishiba), கேபினட் செயலாளர் யோசிதி சுகா (Yoshihide Suga), லிபரல் டெமாகிராடிக் கட்சி கொள்கை தலைவர் புமியோ கிசிடா (LDP policy chief Fumio Kishida) ஆகிய 4 பேர் போட்டியிடலாம் எனவும்  செய்திகள் வெளியாகியுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments